கனடாவில் வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. அத்துடன் பயணிகள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான விசா அனுமதிப்பதும் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் ஆதாயம் இருப்பதாக கூறுகின்றனர். லிபரல் அரசாங்கம் கனேடிய மக்களின் ஆதரவை இழந்து வருவதாக வெளியான தகவலை அடுத்தே அதிகமாக வெளிநாட்டு பயணிகளுக்கான விசா மறுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
கனடாவில் குடியிருப்பு பற்றாக்குறை மற்றும் குடியிருப்புகளுக்கான விலை உயர்வுக்கு காரணம் புலம்பெயர்ந்தோர் என குற்றஞ்சாட்டப்படும் நிலையிலேயே ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
Comments are closed.