விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ராமமூர்த்தி திடீர் மரணமடைந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நாள் முன்பு தான் தனது பிறந்தநாள் விழாவை அவர் கொண்டாடிய நிலையில் இப்படி நடந்திருக்கிறது. ஏற்கனவே தனது மகன் கோபியை திட்டிய அவர் நான் இறந்தால் நீ வந்து இறுதி சடங்குகள் செய்ய கூடாது என அவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராமமூர்த்தி இறந்தபிறகு கோபி இறுதி சடங்கு செய்ய கூடாது என அம்மா உறுதியாக கூறிவிடுகிறார்.
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் பாக்யா தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என அவர் சொல்கிறார்.
பாட்டி சொன்னது போலவே பாக்யா தான் இறுதி சடங்குகளை செய்து முடிக்கிறார்.
தாத்தாவுக்காக ஒட்டு மொத்த குடும்பமும் கதறி இருப்பது ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.
Comments are closed.