அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அதிவேகமாக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி துரத்திச்சென்று காவல்துறையினரால் மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Comments are closed.