குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குளியாபிட்டிய, கலஹிதியாவ பிரதேசத்தில் வசித்து வந்த இசங்க தமித் ராஜபக்ஷ என்ற ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு எதிராக குளியாபிட்டிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் செல்வதற்கு முன்னர், இவரும் மேலும் பலர் இரத்மலேவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் மது விருந்து நடத்தியுள்ளனர்.
வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு கைகோடாரி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீட்டில் மது விருந்தின் போது வந்ததாகக் கூறப்படும் நபர் மற்றும் குடியிருப்பாளர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.