சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி

13

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.

ரணில்(Ranil Wickremesinghe) மற்றும் சஜித்(Sajith Premadasa) தரப்புகளுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ளதுடன், கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு  தாவும் நிலைப்பாடும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சஜித் அணியில் இருந்து வெளியேறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் உரை ஒன்றினால் அந்த அணிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சஜித் தரப்பில் இருந்து ரணில் பக்கம் தாவ பலர் திட்டமிட்டுள்ளதாக கட்சித் தகவல்கள்  தெரிவிக்கின்றன. எனினும் அதனை தடுக்கும் வகையில் சஜித் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில வாரங்கள் உள்ள நிலையில் கட்சிக்குள் குழப்ப நிலையை ஏற்படுத்தும் உறுப்பினர்களை அடையாளம் காணும் சிறப்பு வேலைத்திட்டதை சஜித் ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக சஜித் பிரேமதாச முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக சஜித் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தாவல்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த நிலையில், தலதா அத்துக்கோரளவின் உரையால், சஜித்தின் ஜனாதிபதியாகும் கனவு கலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் கடும் போட்டித்தன்மை நிலவுகிறது.

இவ்வாறான நிலையில் சஜித் அணிக்குள் ஏற்படும் புதிய பிளவுகளால் அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு  அது பாரிய நன்மையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed.