கடந்த மூன்று வருடங்களில் வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொழிலாளர்களில் சுமார் 7999993 பேர் 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
வாரத்திற்கு 40 மணிநேரம், அதற்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 56.2 சதவீதமாக இருந்ததாகவும், இந்த ஆண்டு அது 17 சதவீதம் அதிகரித்து 65.8 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பொருளாதார பணவீக்கத்தால், வாரத்திற்கு வேலை நேரம் நாற்பதாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.