எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் ஆட்சிக்கு வருவது அவர்களின் சொந்த திறமையால் அல்ல, மாறாக ஆளும் அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் அதிருப்தியால் தான் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
புத்தள (Buttala) நகரில் நேற்று (31) இடம்பெற்ற ஆதரவு திரட்டும் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “2,000 அல்லது 3,000 ரூபாய் என்ற சிறு உதவியால் வறுமையில் இருந்து தப்பிக்க முடியாது.
தற்போதைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு (Sri Lanka) நாளாந்தம் 600,000 முதல் 700,000 ரூபாய் வரை கூடுதலாகத் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வறுமை அதிகரித்து வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் எவருக்கும் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான புத்திசாலித்தனமோ, அர்ப்பணிப்போ அல்லது தொலைநோக்கு பார்வையோ இல்லை.
எனவே, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.