இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா…!

9

இலங்கையில்(sri lanka) பலவீனமான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில பலம் வாய்ந்த நாடுகள் இலங்கையில் பலவீனமான அரசாங்கத்தையே விரும்புகின்றன. மேலும், பலவீனமான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது இந்த நாடுகள் இலங்கையில் இருந்து தாம் விரும்பியதை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.

ராஜித சேனாரத்ன சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் அண்மையில் ரணில் விக்ரமசிங்க பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.