சர்வதேசத்தின் கண்ணோட்டத்தை தம்வசம் திருப்பியுள்ள இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற போகும் ஆட்சி மாற்றம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, தேர்தலில் தமது மக்கள் பலத்தை காட்டும் வகையிலும் மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் வகையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில், வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலும் நாட்டின் அரசியல் அமைப்பிலும் ஏற்படவுள்ள திருப்பங்கள் குறித்து பல்தரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இந்திய புலனாய்வு தகவல் மற்றும் இலங்கை அரச புலனாய்வு ஆகியன அநுர குமார திஸாநாயக்கவுக்கே மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன என அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டின் குறப்பிடுகின்றார்.
Comments are closed.