பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

14

எதிர்கட்சி அரசியல்வாதிகளான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை (Ajit Doval) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க. அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்சவுடனும், அஜித் தோவால், பரஸ்பர பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடியுள்ளார்.

Comments are closed.