தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியை விடவும் ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதி செய்ய பல தரப்பினர் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதாரத்தில் மட்டுமன்றி சட்டம், கலாசாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் செழிப்படையச் செய்ய வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன, மத பேதமற்ற ஓர் நாட்டை உருவாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பலப்படுத்த பொலிஸார் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த முறையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.