ஜனாதிபதி தேர்தளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், 13,000 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 45 க்கும் அதிகமான வாக்கு எண்ணும் நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக 1500 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டும் வருகின்றன.
மேலும் 3200 நடமாடும் வாகனங்கள் தேர்தல் காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.