இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

12

இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 27,999 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,341,681 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.