கடுவலைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் ஆற்றோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடுவலையின் பியகம பிரதான பாதை உள்ளிட்ட பல பிரதேசங்களும் இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
தெற்கு அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனையடுத்து தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுவலையில் இருந்து கடவத்தை வரை செல்லவோ, கடவத்தையில் இருந்து கடுவலை வழியாக வெளியேறவோ முடியாத நிலை ஏற்ப
Comments are closed.