கொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் சிறு தொகையினரின் இரண்டாவது வாக்கினை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு டீல் பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (29.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தூதரகங்கள் அல்லது வேறு நாடுகளுடன் டீல் பேச வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
இந்நிலையில், அவர்களுக்கு கிடைக்கப்பெருகின்ற வாக்குகளில் இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு அளித்து ஜனாதிபதியிடம் இருந்து தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.