இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து எச்சரிக்கும் அமெரிக்க ஊடகத்தின் புலனாய்வு அறிக்கை

14

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க செய்தித்தளத்தின் புலனாய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.

எனவே மீட்சியை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பது இன்றியமையாதது என்று குறித்த செய்தித்தளம் வலியுறுத்துகிறது.

தற்போதைய சர்வதேச நாணய நிதியம் ஆதரவு பெற்ற கடன் நிலைத்தன்மைப் பாதையானது பொருளாதாரத்திற்கு பாரிய உந்துதலை வழங்கவில்லை.

என்றாலும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கும் அச்சுறுத்தலுக்கும் வழிவகுக்கும் என்று செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு திட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கான திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தின் தலைவிதியைச் சுற்றி நிச்சயமற்ற தன்மையை எழுப்புகிறது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எனவே இலங்கையில் பொருளாதார மீட்சியை வலுப்படுத்த, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பது இன்றியமையாதது என்று அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

Comments are closed.