இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

14

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2019 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023ல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 70,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை இதன் விளைவாகவே பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதற்கான முக்கிய காரணம் என மகப்பேறு மருத்துவர் அஜித் பெர்னாண்டோ (Ajith Fernando) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை பெற்ற சில தம்பதிகள் இரண்டாவது குழந்தையை பற்றிக் கருத்தில் கொள்வதில்லை என்பதுடன் குழந்தை இல்லாதவர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    

Comments are closed.