ரணில் தோற்றால் நாட்டை விட்டே வெளியேறப்போகும் மக்கள் : அச்சமூட்டுகிறார் ராஜித

15

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தோல்வியடைந்தால் பலர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க என்ற நபருக்காக அல்ல, நாட்டுக்காகவே மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் திறமை இருப்பதாகவும், வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த முறை மொட்டு எம்பிக்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை போன்று எதிர்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினால் இம்முறை மற்றவர்களின் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனை வழங்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

Comments are closed.