ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் காணப்படும் ஆபத்துக்கள் குறித்து கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு வேட்பாளருக்கும் அநீதி இழைக்கப்படத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Comments are closed.