இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 15ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த தங்கலான் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 69 கோடி வரை வசூல் செய்துள்ளது.
தங்கலான் திரைப்படம் வெளிவந்த அதே நாளில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி 2. கடந்த 2015ஆம் ஆனது வெளிவந்த டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் டிமான்டி காலனி 2 பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி வரும் நாட்களில் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments are closed.