விஜய் பத்திரிக்கை தொடர்ந்து வைரலாகும் அஜித்-ஷாலினி திருமண பத்திரிக்கை.. என்ன டிசைன் பாருங்க

19

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித். துணிவு படத்தை தொடர்ந்து இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டு நடந்து வந்தது, சமீபத்தில் தான் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது.

இப்படத்தை முடிப்பதற்குள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வந்தன, அடுத்த என்ன அப்டேட் என்று தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித்-ஷாலினியின் காதல் கதை அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் இவர்கள் டாப்பில் இருப்பவர்கள்.

இவர்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் முடிந்தது, சென்னையில் உள்ள தாஜ் கோரமெண்டல் ஹோட்டலில் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்-சங்கீதா திருமண பத்திரிக்கை வைரலாகி வந்த நிலையில் தற்போது அஜித்-ஷாலினியின் திருமண பத்திரிக்கை வைரலாகிறது.

Comments are closed.