படு மாஸாக நடந்த விஜய்யின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா படங்களின் வியாபாரம்… எந்த படம் எவ்வளவு வியாபாரம் பாருங்க

13

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் என்ற படம் தயாராகி இருக்கிறது, ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் படு மாஸாக நடந்து வருகிறது. அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் சூர்யா நடிக்க கங்குவா படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இரண்டு படத்திற்கான பிசினஸும் செம மாஸாக நடந்துள்ளது. விஜய்யின் கோட் படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ் ரூ. 53 கோடி வரை நடந்துள்ளதாம்.

அதேபோல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகப்போகும் கங்குவா படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் ரூ. 40 கோடி வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா திரைப்பயணத்தில் கங்குவா படம் பெரிய அளவில் தயாராகி வருகிறது, வியாபாரமும் மாஸாக நடக்கிறது.

Comments are closed.