சிறப்பு தோற்றத்தில் நடித்ததை தொடர்ந்து முழுநேர சீரியலில் நடிக்க கமிட்டான அபிராமி… எந்த டிவி தொடர் தெரியுமா?

15

பரதநாட்டிய நடன கலைஞரும் மாடல் அழகியுமாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க களமிறங்கியவருக்கு நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

அதன்பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சின்னத்திரையில் பிக்பாஸ் 3வது சீசன் கலந்துகொண்டு 56 நாட்கள் வீட்டில் விளையாடினார்.

அதன்பின் ராக்கெட்ரி, துருவ நட்சத்திரம் போன்ற சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

படங்களை தொடர்ந்து விளம்பரம், போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இப்போது என்ன விஷயம் என்றால் ஜீ தமிழிலேயே ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜேஸ்மின் ராத் வெளியேற அவருக்கு பதில் அபிராமி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Comments are closed.