நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவருக்கு முதல் படம் கொஞ்சம் சறுக்க அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தொடரி, ரெமோ, பைரவா டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தவருக்கு தனது நடிப்பு திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது மகாநதி திரைப்படம். இந்த படத்திற்காக தேசிய விருது எல்லாம் வாங்கிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் ரகு தாத்தா என்ற படம் வெளியாகி இருந்தது.
ரகு தாத்தா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, விஜய்யின் நண்பர் சஞ்சீவை நான் சார் என்றுதான் அழைப்பேன். ஒருமுறை நான் உடல் இளைத்துவிட்டேன், அப்போது சஞ்சீவ் என்னை சந்தித்தார். அந்த சமயத்தில் என்னிடம் ஏன் நீ இப்படி ஒல்லி ஆகிட்ட இப்படி ஆக சொல்லி உன்னிடம் யார் சொன்னது என்று உரிமையோடு கேட்டதாக கூறியுள்ளார்.
Comments are closed.