தந்தை விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன்: நாமல் சூளுரை

16


2015 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சியை எங்கு நிறுத்தியதோ, அங்கிருந்து ஆரம்பிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாவிற்கு நேற்று (19) விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மற்ற அரசியல் கட்சிகளைப் போல, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை என கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது எனவும், இந்த நாட்டை பிரிக்க முடியாதெனவும் கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.