இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் அதிகரிப்பு

14

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் இன்று வரை மொத்தம் 631 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதில் தேசிய தேர்தல் தொடர்பான மேலாண்மை மையத்துக்கு 346 முறைப்பாடுகளும், மாவட்ட மையங்களுக்கு 285 முறைப்பாடுகளும் அடங்குவதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.