சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்களும் ஆவலுடன் அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா திரைப்படத்தை திரையரங்கில் கொண்டாடவேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா மட்டுமின்றி ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸாகவுள்ளது. ஆம், TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தை அக்டோபர் 10ஆம் தேடி வெளியிடப்போவதாக அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் கங்குவா- வேட்டையன் படங்களுக்கு இடையே மோதல் ஏற்படவுள்ளது. ஆனால், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ரஜினி படத்துடன் மொத்தமாட்டோம் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனால் கங்குவா ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று.
Comments are closed.