இலங்கைக்கு இனி நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகின்றோம் : டக்ளஸ் உரை

35

இலங்கைக்கு இனி நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகின்றோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து அநுராதபுரம், சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “கடந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளிலிருந்து பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழுச்சியை நோக்கிக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவ்வாறான ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.

அதனால் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டியது அவசியம். நாட்டுக்கு இனி நல்ல காலம் பிறக்கும் என்று நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.