2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் அவர்கள் இங்கு வந்துள்ளனர்.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உட்பட்ட ஆறு தடவைகள் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் தேர்தல் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், தற்போதைய ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புப் பணியமர்த்தப்பட்டமை, நாட்டில் நம்பகமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் அமைதியான தேர்தல்களை ஆதரிப்பதற்கான தங்களின் நீண்டகால உறுதிப்பாட்டை காட்டுவதாக ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கண்காணிப்பாளர் மற்றும் ஒன்பது தேர்தல் நிபுணர்கள் அடங்கிய பிரதான குழு ஏற்கனவே கொழும்பு வந்துள்ள நிலையில், 26 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் விரைவில் பணியில் இணைந்துகொள்வார்கள்.
அவர்கள், தேர்தல் நாடு முழுவதும் கண்காணிப்புக்காக அனுப்பப்படுவார்கள். அதன் பிறகு, 32 குறுகிய கால கண்காணிப்பாளர்கள் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
இதேவேளை 17.1 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 5 ஆண்டு காலத்திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
Comments are closed.