இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) சகோதரியின் மகளான சஞ்சல குணவர்தன (Sansala Gunawardana) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்து கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (17) கட்சியில் இணைந்துள்ளார்.
மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதல் நபராக சஞ்சல குணவர்தனவை குறிப்பிடலாம்.
இவ்வாறு கட்சியில் இணைந்து கொண்ட அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை (Matara) மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாச நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.