தங்கலான் 2ம் பாகம்.. சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்

21

சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருப்பினும் படத்தில் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இப்படி ஒரு ரோலில் விக்ரம் தவிர வேறு எந்த ஹீரோவும் நடிக்கவே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள், அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார் விக்ரம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தங்கலான் படத்தின் வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்று இருக்கிறது.

அதில் பேசிய விக்ரம் தங்கலான் 2ம் பாகத்தை அறிவித்து இருக்கிறார். “தங்கலான் படத்திற்க்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து இருப்பதால் பா.ரஞ்சித் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அடுத்த பாகம் விரைவில் எடுக்க ஆசைப்படுவதாக கூறி இருக்கின்றனர்” என விக்ரம் மேடையில் கூறி இருக்கிறார்.

Comments are closed.