இலங்கையின், மூளை வெளியேற்றம் மற்றும் பணியாளர் வெற்றிடங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்துக்கு உதவும் சம்பளத்தை வழங்கத் தவறியதன் மூலம் இந்தப்பிரச்சினையில் தனியார்துறையும் பங்களிப்பதாக, மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் அனிலா டயஸ் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரின் மதிப்பீட்டு அறிக்கைக்கமைய, இலங்கையில் பட்டதாரிகளுக்கான ஆரம்ப நிலை சம்பளம் 30,000 ரூபா முதல் 40,000 ரூபா வரை நிர்ணயிக்கப்படுகிறது.
எனினும், இது ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மேலதிகமானோர் தொழில் செய்யாதுவிடத்து, அந்த குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் ஈடுசெய்ய போதாதது.
இந்தநிலையில், அவர்கள் வெளிநாட்டில் பசுமையான மேய்ச்சல் நிலங்களில் வேலைகளை விரும்புவதில் ஆச்சரியமில்லை என்றும் அனிலா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஊதியங்கள் உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கண்ணியமான ஊதியம் வழங்கத் தவறியதை மன்னிக்க முடியாது என கண்டித்துள்ளார்.
மேலும், எதிர்கால கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொருளாதார வளர்ச்சி இன்றியமையாதது என்றாலும், தொழிலாளர்கள் இல்லாமல் அத்தகைய வளர்ச்சி சாத்தியமற்றது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தொழிலாளர் பங்கேற்பு வீதம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, நாட்டில் மூன்று பெண்களில் ஒருவர் மட்டுமே பணியிடத்தில் இணைகிறார்.
அதேவேளை, பல பெண்களுக்கு, அவர்களின் சம்பளம் குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு செலவுகளை கூட ஈடுகட்ட முடியாத அளவில் அமைந்துள்ளது.
இதனையடுத்து, வருடாந்தம் 200,000 முதல் 300,000 இலங்கையர்கள் புலம்பெயர்ந்த வேலைகளுக்காக வெளியேறுகிறார்கள். இது உள்ளூர் வணிகங்களில் பணியாளர் வெற்றிடங்களை அதிகரிக்கிறது.
இந்த சவால்கள் இருந்த போதிலும், இலங்கையின் தொழிலாளர் படையில் 30 சதவீதத்தினர் மட்டுமே முறையான தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, முதலாளிமார் சம்மேளனம், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பங்குதாரர்கள் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் அனிலா டயஸ் பண்டாரநாயக்க கோரியுள்ளார்.
Comments are closed.