எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க 27 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதற்காக, குறித்த 27 கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
மனிதநேய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உள்ளிட்ட 27 கட்சிகளுடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜயம்பதி விக்கிரமரத்ன உள்ளிட்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.