இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் அல்ஜீரியாவின் சார்பில் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் அல்ஜீரியா வீசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் அலுவலகங்களை நிறுவியுள்ளது.
உலகின் பல அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் சுமார் 69 அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் சேவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து விதமான விசாக்களையும் வழங்கும் நோக்கில் புதுடெல்லி, மும்பை, சென்னை கொல்கொட்டா, ஹைதராபாத், காட்மண்டு மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை ஊடாக அல்ஜீரியாவிற்கு விசா கோரி விண்ணப்பம் செய்யும் இந்திய பிரஜைகளுக்கு இலகுவான சேவையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் காரியாலயங்கள் நிறுவப்பட்ட காரணத்தினால் பயணிகள் இலகுவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஆறு நாட்களில் விசாவை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திற்கு விசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு அனுமதித்த காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இடை நிறுத்துமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.