எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச என்ற பெயரை உடைய இரு வேறு வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமம்பாளர் நாமல் ராஜபக்ச இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மற்றுமொரு நாமல் ராஜபக்சவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
சமபிம கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச என்பவருக்காக ஹேமந்த விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் 36 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும், ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்னமும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் நண்பகல் வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.