காதலியை பார்க்க சென்ற காதலன் பரிதாபமாக உயிரிழப்பு

62

சிலாபத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ள காதலியை சந்திப்பதற்காக சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. இந்த இளைஞன் நீர்கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்.

சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் தொடுவாவ வீட்டுக்கு வந்த அவர், கடையொன்றின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காதலியை சந்திப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

காதலன் வந்திருப்பதாக வீட்டின் உரிமையாளரிடம் காதலி கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியே வந்துள்ளார்.

காதலி உரிமையாளரிடம் கூரிய விடயத்தை அறியாத காதலன் தவறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

Comments are closed.