அதிகளவான அரசியல் கட்சிகள் ரணிலுடன் கூட்டு! அடுத்த வாரம் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்புகள்

10

அதிகளவிலான அரசியல் கட்சிகள் அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானதாகவும், ஊடகங்களின் கவனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திரும்பும் வாரமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

காலி மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, வஜிர அபேவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments are closed.