முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நேரத்தில் வற்புறுத்த முயன்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதனை புதுடில்லியில் உள்ளவர்கள் வழங்கத் தயாராக இருப்பதாக கோட்டாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும், வன்முறையின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது புதுடில்லிக்கு சிறந்த விடயமாக இருக்காது என்ற அடிப்படையில் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்றார் என்பதும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோட்டாபய அதனை ஏற்காது நாட்டில் இருந்து வெளியேறினார்
பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளமையை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.