முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயல்படுவோரினால், அரசியல் ரீதியாக தலைதூக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு மக்கள் வருகை தருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அந்த நிலைமையே உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மிகவும் குறைந்த அளவு வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இளம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களம் இறக்கியுள்ளதாகவும் அனைவரும் அவருடன் இணைந்து கொள்ள முடியும் என எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Comments are closed.