இலங்கையின் தேர்தலை கண்காணிக்க வரும் வெளிநாட்டு அமைப்புக்கள்

13

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகம் (Election Commission) அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு வாக்கெடுப்பை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.