ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 31ம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 317 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் வேறு விதி மீறல்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Comments are closed.