ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
டொக்டர் சுதர்சனி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொக்டர் சுதர்சனியின் கணவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நெருக்கத்தின் அடிப்படையிலேயே சுதர்சனி அரசியலில் களமிறங்யிருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் டொக்டர் சுதர்சனி சஜித் தரப்பிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.