ரணிலுக்கு ஆதரளிக்கும் மகிந்த கட்சியினர் ஆரம்பிக்கப்போகும் புதிய அரசியல் கட்சி

15

2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.

முன்னாள் உள்ளுராட்சி தலைவர்கள் மன்றம் நேற்று (10.08.2024) நடத்திய விசேட சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை சாத்தியப்படுமானால், ரணிலுக்கு ஆதரவளிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிரந்தரமாக அந்த கட்சியில் இருந்து விலகும் சந்தர்ப்பம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.