தமிழில் 12 நடிகர்களால் நிராகரிக்க பட்ட படம்.. ரீமேக்கில் ரூ. 100 கோடி வசூல் ஈட்டியது! என்ன படம் தெரியுமா?
தென்னிந்திய படங்கள் பல பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்று பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆனால் அதில் சில படங்கள் மட்டுமே வெற்றியை பெறுகிறது. அந்த வகையில் தமிழில் பிளாக் பஸ்டர் ஆன படம் ஒன்று இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
இந்த படம் அதன் பட்ஜெட்டை விட ஏழு மடங்கு வசூல் செய்தது. கடந்த 2005ம் ஆண்டு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் கஜினி. இந்த படத்தில் சூர்யாவுடன், அசின், பிரதீப் ராவத், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தப் படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில்,அமீர் கான் நடித்து அதுவும் பிளாக்பஸ்டராக அமைந்தது.
முதலில் இந்த படத்தில் நடிக்க சூர்யா தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்கு முன்பு நடிகர் அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்களிடம் பேசியதாகவும் அவர்கள் நிராகரித்ததால் 13வதாக சூர்யாவை அழைத்ததாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி, இந்தி ரீமேக்கிலும் முதல் தேர்வாக அமீர் கான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் இப்படம் முதலில் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர் ஸ்கிரிப்டை விரும்பாததால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் தமிழில் ரூ. 7 கோடியில் தயாரிக்கப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது என சொல்லப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு 2008-ல் கஜினி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அதிலிலும் ரூ.100 கோடிக்கு இந்த படம் வசூல் செய்தது. இதன்முலம், ரூ. 100 கோடிக்கு வசூலை ஈட்டிய முதல் இந்தி ரீமேக் படம் என்ற பட்டத்தை கஜினி படம் பெற்றது.
Comments are closed.