விசா வழங்கலில் தொடரும் சிக்கல்கள்

13

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதிமுறைகளின்படி, புதிய முறைக்கேற்ப,தகவல் தொழில்நுட்ப முறை மாற்றப்பட்டதால் பழைய விசா முறைக்கு திரும்புவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், பழைய விசா வழங்கும் முறை தொடர்பில் மொபிடெல் நிறுவனத்துடன் விவாதித்ததாகவும், எனினும் தகவல் தொழில்நுட்ப முறை மாற்றம் அதற்கு தடையாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறைகளை நிறைவேற்றி மீண்டும் பழைய முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னதாக புதிய முறையின்கீழ் விசா வழங்கல் பணி ஏர் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது எனினும் பலரின் கடும் எதிர்ப்புக் மத்தியில் குறித்த முயற்சி கைவிடப்பட்டது.

Comments are closed.