மேலதிக சேவை கொடுப்பனவு! 18 வருட கால கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

10

மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி அளித்தமைமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விசேட நன்றியை தெரிவிக்க வேண்டும்.

இந்த கொடுப்பனவானது, நிதி அமைச்சுக்கு சுமையாக இல்லாமல்,இருப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வழங்கப்படும்.

18 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுர்வேத மருத்துவர்கள்,பல சந்தர்ப்பங்களில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இது அரசாங்கத்தின் ஆயுர்வேத வைத்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி என குறிப்பிடலாம்.

மேலும் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் பாரம்பரிய வைத்தியர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இதனிடையே பாரம்பரிய வைத்தியர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால், அடுத்த சில வாரங்களில் அவர்களுக்கான பரீட்சை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.