பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் பாதுகாப்பு தொடர்பிலேயே இலங்கை கிரிக்கெட் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து பயணம் செய்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை அணி வீரர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
Comments are closed.