தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் – 2 படம் வெளியானதை தொடர்ந்து தற்போது, கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யா எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
தற்போது, இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல் நாள் படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இறுதி நாள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
Comments are closed.