தேர்தல் சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை

10

ஜனாதிபதிதேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்கள் அந்த நிறுவனங்களின் பிரதான உத்தியோகத்தர்கள் என்பதால் அவர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் முறைகேடு நடந்தால் அந்த அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் தமது கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.