நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.08.2024) உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மின்சாரம் இல்லாத பெரும்பாலான பாடசாலைகளில் நாற்பது அல்லது ஐம்பது குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.